www.garudabazaar.com

ஶ்ரீதேவியுடன் எடுத்த கடைசி ஃபோட்டோ.. போனி கபூர் உருக்கமான பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து அவருடைய கணவர் போனி கபூர் உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார்.

Boney Kapoor shared a Last photo of his wife sridevi

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "அந்த லாரி மட்டும் நேர வந்திருந்தா".. Vishal ஷூட்டிங் விபத்து குறித்து S.J. சூர்யா!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஶ்ரீதேவி.  ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான அவரது திரை வாழ்க்கையில், 300 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் பணியாற்றியுள்ளார். அவருக்கு பத்மஸ்ரீ, தேசிய திரைப்பட விருது, மாநில அரசு விருதுகள் மற்றும் பல சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

Boney Kapoor shared a Last photo of his wife sridevi

Images are subject to © copyright to their respective owners.

இவருடைய கணவர் போனி கபூர், இந்திய சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர். பல இந்தி திரைப்படங்களை தயாரித்துள்ள போனி கபூர், நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய வெற்றிப் படங்களை தயாரித்தவர். மேலும் வீட்ல விஷேசம், நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். தெலுங்கு சினிமாவிலும் வக்கீல் சாப் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

Boney Kapoor shared a Last photo of his wife sridevi

Images are subject to © copyright to their respective owners.

நடிகை ஸ்ரீதேவி, கடந்த 2018-ஆம் ஆண்டு துபாயில் மரணம் அடைந்தார். ஶ்ரீ தேவியின் நினைவாகவே நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்கள் உருவானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

Boney Kapoor shared a Last photo of his wife sridevi

Images are subject to © copyright to their respective owners.

அதில்,  தமது குடும்பத்துடன் ஶ்ரீ தேவி & போனி கபூர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து "கடைசி புகைப்படம்" என உருக்கமாக தலைப்பிட்டுள்ளார். மூன்று நாட்களுக்கு முன் நடிகை ஶ்ரீதேவியின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read | சந்திரமுகி - 2 படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகை.. அவரே வெளியிட்ட வைரல் போட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Boney Kapoor shared a Last photo of his wife sridevi

People looking for online information on Boney kapoor, Sridevi will find this news story useful.