கனாவுக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷின் "மெய்" படத்தின் மேக்கிங் வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 21, 2019 11:52 AM
சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்ஷன் சார்பாக தயாரித்து நடித்த படம் 'கனா'. அருண்ராஜா காமராஜா இயக்கிய இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மெய்'. சுந்தரம் புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த படத்தை எஸ்.ஏ.பாஸ்கரன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிரித்வி குமார் இசையமைத்துள்ளார்.
நாயகனாக நிக்கி சுந்தரம் அறிமுகம் ஆகிறார். மேலும் சார்லி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் குறித்து இயக்குநர் எஸ்.ஏ.பாஸ்கரன் கூறுகையில், மருத்துவத் துறையில் காணப்படும் ஊழல்களை மையப்படுத்தி கதையை உருவாக்கியுள்ளனர்.
இப்படத்திற்கு வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். அணில் பிரித்வி குமார் இசை அமைக்கிறார். இந்நிலையில் ‘மெய்’ படத்தின் மேக்கிங் வீடியோ Behindwoods தளத்தில் வெளியாகியுள்ளது
கனாவுக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷின் "மெய்" படத்தின் மேக்கிங் வீடியோ வீடியோ