கனாவுக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷின் மெய் படத்தில் இருந்து வெளியான பாடல்கள் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 19, 2019 12:26 PM
சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்ஷன் சார்பாக தயாரித்து நடித்த படம் 'கனா'. அருண்ராஜா காமராஜா இயக்கிய இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மெய்'. சுந்தரம் புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த படத்தை எஸ்.ஏ.பாஸ்கரன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிரித்வி குமார் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் நிக்கி சுந்தரம் ஹீரோவாக அறிமுகமாக, கிஷோர், சார்லி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து மாயவலை மற்றும் காற்றே சிலமுறை என இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளது.
இதில் மாயவலை பாடலை கிறிஸ்டோபர் பிரதீப் எழுத, இசையமைப்பாளர் பிரித்வி குமார், சஞ்சனா ராஜா இணைந்து பாடியுள்ளனர். காற்றே சில முறை என்ற பாடலை கிறிஸ்டோபர் பிரதீப் எழுத, பிரித்வி குமார் பாடியுள்ளார்.
கனாவுக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷின் மெய் படத்தில் இருந்து வெளியான பாடல்கள் இதோ வீடியோ