32 ஆண்டுகள் தந்த நிதானம் - இந்தியன் 2 வில் கமலுடன் நடிப்பது குறித்து பிரபல நடிகர் நெகிழ்ச்சி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 21, 2019 11:44 AM
ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க விருக்கிறார். அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார்.

இந்த படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், வித்யூத் ஜாம்வால், நெடுமுடி வேணு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கவிருக்கின்றனர்.
இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணிகள் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங்கில் கமல்ஹாசன் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் கலந்துகொள்ளவிருக்கிறார். இந்த படம் வருகிற 2021 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் விவேக் இந்தியன் 2வில் நடிக்கவிருப்பதாக தெரிவித்திருந்தோம். விவேக் இதுவரை கமல்ஹாசனுடன் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், நிகழும் வரை சொப்பனம்; நிகழும் போதோ பக்குவம். 32 ஆண்டுகள் தந்த நிதானம். முழுமையான ஈடுபாட்டுடன் உழைப்பதே இக்கணப் பிரதானம். எப்போதும் போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். கமல் சார் க்கு என் அன்பு; ஷங்கர் அவர்களுக்கு என் நன்றி. லைக்கா வுக்கு என் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.