மருத்துவ துறை ஊழல்களை மையப்படுத்தி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்' படத்தின் ட்ரெய்லர்
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 16, 2019 11:18 AM
நிக்கி சுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மெய்’. இவர் சித்திக், ஜீத்து ஜோசப் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.
நாயகனாக நிக்கி சுந்தரம் அறிமுகம் ஆகிறார். மேலும் சார்லி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் குறித்து இயக்குநர் எஸ்.ஏ.பாஸ்கரன் கூறுகையில், மருத்துவத் துறையில் காணப்படும் ஊழல்களை மையப்படுத்தி கதையை உருவாக்கியுள்ளனர்.
இப்படத்திற்கு வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். அணில் பிரித்வி குமார் இசை அமைக்கிறார். இந்நிலையில் ‘மெய்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மருத்துவ துறை ஊழல்களை மையப்படுத்தி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்' படத்தின் ட்ரெய்லர் வீடியோ
Tags : Aishwarya Rajesh, Kishore, Mei