Fakir Other Banner USA

தெலுங்கில் என்ட்ரி கொடுக்கும் சிவகார்த்திகேயன் படத்தின் டீஸர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்ஷன் சார்பில் தயாரித்து வெளியான படம் 'கனா'. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்தார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்திருந்தார்.

Sivakarthikeyan, Aishwarya Rajesh's Kousalya Krishnamurthy teaser is out

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் பயிற்சியாளர் வேடத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்த படம் தெலுங்கில் 'கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி' என்ற பெயரில் ரீமேக்காகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அதே வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. டீஸரை சிரஞ்சீவி வெளியிட்டுள்ளார்.

டீஸரில் இறுதியில் சிவகார்த்திகேயன் தோன்றுகிறார். தமிழில் நடித்த அதே வேடத்தில் தெலுங்கிலும் நடிப்பார் என்று தோன்றுகிறது.

தெலுங்கில் என்ட்ரி கொடுக்கும் சிவகார்த்திகேயன் படத்தின் டீஸர் இதோ வீடியோ