சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஜஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து கடந்த வருடம் வெளியான படம் கனா. இந்த படத்தை அருண்ராஜா காமராஜா இயக்கியிருந்தார்.

இந்த படம் தெலுங்கில் கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் உருவாகிறது. இந்த படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. டீஸரை மெகா ஸ்டார் சிரஞ்சீவி வெளியிடவுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், மெகா ஸ்டார் சிரஞ்சீவி எனக்கு போன் செய்தது மிகப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி டீஸர் மிகவும் பிடித்ததாக அவர் சொன்னார். எனக்கு இன்னும் பிரம்மிப்பாக இருக்கிறது. மிக்க நன்றி சார். இது எனக்கு மிகப் பெரிய கௌரவம் என்று குறிப்பிட்டுள்ளார்.
It was such a big surprise call from #MegaStarChiranjeevi garu ... he said he loved #KausalyaKrishnamurthy teaser .. am still awestruck d way chiru sir spoke to me .. thank u so much sir ... such a big honour to me @CCMediaEnt
— aishwarya rajessh (@aishu_dil) June 18, 2019