நாமினேஷனில் ரிபீட்டான ஒரே பேர் - இந்த வாரம் இவர் தானா?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 15, 2019 10:57 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரத்துக்கான நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற 16 போட்டியாளர்களில் ஃபாத்திமா பாபு, வனிதா ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினர்.
அவர்களை தொடர்ந்து இந்த வாரத்துக்கான நாமினேஷன் இன்று நடைபெற்றது. இதில் பெரும்பாலான போட்டியாளர், பிக் பாஸ் வீட்டில் முன்னுக்கு பின் முரணாக இருக்கும் மீராவை நாமினேட் செய்தனர்.
அவரையடுத்து, சரவணன், மோகன் வைத்தியா, சேரன், அபிராமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் யார் இந்த வீட்டில் நீடிப்பார்கள், யார் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்பதை, இந்த வாரம் அவர்கள் நடந்துக் கொள்ளும் விதம் மூலம் மக்களிடம் எத்தனை வாக்குகளை பெறுகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
Tags : Meera Mitun, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 3