VTK D Logo Top
Sinam D Logo Top
www.garudabazaar.com

'VTK' படம் பார்த்துட்டு பிரபல நடிகர் போட்ட சூப்பர் ட்வீட்.. நெகிழ்ந்த சிம்பு..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெந்து தணிந்தது காடு படத்தினை பார்த்த பிறகு பிரபல நடிகர் படத்தினை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

Actor Manobala tweet about VTK movie and Silambarasan TR

Also Read | "கௌதம் மேனன் பெரிய கமல் ரசிகர் அதான்".. 'வெந்து தணிந்தது காடு' படம் பற்றி லோகேஷ் கனகராஜ்!

வெந்து தணிந்தது காடு படம் நேற்று செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்த படத்தினை தமிழகம் முழுவதும்  உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது.

வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். தென் மாவட்டத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளியாக மும்பைக்கு செல்லும் முத்து வீரனின் (சிம்பு) வாழ்க்கை சம்பவங்களே "வெந்து தணிந்தது காடு" படமாகும்.

Actor Manobala tweet about VTK movie and Silambarasan TR

இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக  நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

'வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

Actor Manobala tweet about VTK movie and Silambarasan TR

கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக எழுத்தாளராக இணைந்துள்ளார். கவிஞர் தாமரை பாடலாசிரியராக பணிபுரிந்துள்ளார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிந்துள்ளனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Actor Manobala tweet about VTK movie and Silambarasan TR

இந்நிலையில் இந்த படத்தினை பார்த்த பிறகு நடிகர் மனோபாலா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "சிம்பு, வெந்து தணிந்தது காடு ஒரு அற்புதமான படம்...தலை வணங்குகிறேன்... உன்னை ஒன்னும் பண்ண முடியாது..." என மனோபாலா பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு நடிகர் சிம்பு, "மிக்க நன்றி அண்ணா" என ட்வீட் செய்துள்ளார்.

Also Read | BREAKING: அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்'.. தாறுமாறான சென்னை ஷூட்டிங் அப்டேட்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Manobala tweet about VTK movie and Silambarasan TR

People looking for online information on AR Rahman, Manobala, Manobala tweet about VTK movie, Silambarasan TR, Venthu Thaninthathu Kaadu will find this news story useful.