தளபதி விஜய்யின் 'பிகில்' பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை எதிர்த்து கறிக்கடை உரிமையாளர்கள் போராட்டம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 23, 2019 07:11 PM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்துள்ள படம் பிகில். அட்லி இயக்கியுள்ள இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பெண்கள் ஃபுட்பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சு செம வைரலானது. இதனிடையே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இறைச்சி வெட்டும் கட்டை ஒன்றும் அதன் மீது கத்தி ஒன்று இருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதன் மீது தளபதி விஜய் கால் வைத்திருப்பார்.
இந்த போஸ்டர் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் கறிக்கடை உரிமையாளர்கள் , தங்களை இழிவு படுத்துவதாகவும் அதனால் படத்தில் இருந்து அந்தக் காட்சியை நீக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.