தளபதி விஜய்யின் பிகில் படம் குறித்து தயாரிப்பாளர் உருக்கமான பதிவு
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 23, 2019 11:26 AM
நடிகர் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்த நிலையில், அப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்.19ம் தேதி தாம்பரத்தில் உள்ள சாய் ராம் கல்லூரியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் லைவ் performance, தளபதி விஜய் லைவாக பாடிய ‘வெறித்தனம்’ பாடல், அவரது குட்டிக் கதை என ரசிகர்களின் ஆராவாரத்துக்கிடையே நடந்த நிகழ்ச்சி நேற்று (செப்.22) மாலை 6 மணிக்கு சன் தொலைக்காட்சியில் உலகம் முழுவதும் ஒளிபரப்பானது.
பிகில் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த பிறகு, இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கனவு நனவானது. அனைத்திற்கும் நன்றி.. எங்க தளபதி பிகில்’ என பகிர்ந்துள்ளார்.