KAAPAN USA OTHERS
www.garudavega.com

'இப்போ கொஞ்ச நாளா குசும்பும் சேர்ந்து வருது' - தளபதியின் பேச்சு குறித்து பிரபல ஹீரோ கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிற படம் 'பிகில்'. பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்  நிறுவனம் தயாரித்துள்ளது.

Shanthanu Comments about Thalapathy Vijay Bigil

அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் தளபதி விஜய் நடித்து வரும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 19 வியாழன் அன்று மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சு செம வைரலானது. இந்த நிகழ்ச்சி நேற்று ( செப்டம்பர் 22 ) அன்று சன் டிவியில் ஒளிபரப்பானது.

இதுகுறித்து நடிகர் சாந்தணு தனது ட்விட்டர் பக்கத்தில், 'அண்ணா பேசுன ஒவ்வொரு வார்த்தையும் ரசிகர்களையும், படத்தில் வேலை செய்த ஒவ்வொரு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மறக்காம நன்றி சொல்றதும்... அதனால் தான் அவர் தளபதி. அவர் நமக்கு முன்மாதிரியாக விளங்குகிறார். இப்போ கொஞ்ச நாள குசும்பும் சேர்ந்து வருது. அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளையும் நேசிக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.