காருக்கு பின்னாடி தளபதி விஜய் டயலாக் - பகிர்ந்த பிரபல நடிகர்... டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 07, 2019 06:52 PM
நடிகர் விஜய் தற்போது 'தளபதி 64' பட ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை 'கைதி', 'மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகி வருகிறார். அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
![Manobala Shares a picture about Thalapathy Vijay's dialogue Manobala Shares a picture about Thalapathy Vijay's dialogue](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/manobala-shares-a-picture-about-thalapathy-vijays-dialogue-photos-pictures-stills.jpg)
இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், சாந்தனு, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன், பிரேம், விஜே ரம்யா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் பிரபல இயக்குநரும், நடிகருமான மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில், புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ''ஒரு காரின் பின் 'சர்கார்' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய, 'உசுப்பேத்துறவங்க கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவங்க கிட்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்மனு இருக்கும்' என்ற வசனம் எழுதப்பட்டிருந்தது. இதனை தளபதி ரசிகர்கள் அதிக அளவில் ரீட்வீட் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.
Car backside pic.twitter.com/xbAu5cT4AR
— manobala (@manobalam) December 7, 2019