‘தளபதி 64’ பத்தி ஏதாச்சும் அப்டேட் குடுங்களேன்..!’ - பிரபல தயாரிப்பாளர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

Vijay's Bigil Movie Creative Producer Archana Kalpathi Thalapathy 64 Update

இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவும், பிலோமின்ராஜ் படத்தொகுப்பும் கவனிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். மேலும், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி, விஜே ரம்யா, டிக் டாக் புகழ் லிண்டு ரோணி, கல்யாணி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் விஜய்யின் பிகில்  படத்தை தயாரித்த அர்ச்சனா கல்பாத்தி தனது டுவிட்டரில், தளபதி 64 படத்தின் ஃபஸ்ட் லுக் அல்லது மோஷன் போஸ்டர் அப்டேட் கிடைத்தால் நன்றாக இருக்கும் என பதிவு செய்துள்ளார்.