கேப்டன் வீட்டில் கெட்டி மேளம்..! - எளிமையாக நடந்த விஜயகாந்த் மகன் நிச்சயதார்த்தம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Dec 07, 2019 05:58 PM
பிரபல திரைப்பட நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்தின் மூத்த மகன் விஜய் பிரபாகரனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

விஜயகாந்த் மற்றும் பிரேமலதா தம்பதியினருக்கு விஜய் பிரபாகரன், சன்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகனான விஜய் பிரபாகரன் அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் இளங்கோ என்பவரின் மகள் கீர்த்தனா என்பவருக்கும் விஜய் பிரபாகரனுக்கும் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பங்கேற்கவில்லை. இவர்களின் திருமண தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கேப்டன் வீட்டில் கெட்டி மேளம்..! - எளிமையாக நடந்த விஜயகாந்த் மகன் நிச்சயதார்த்தம் வீடியோ