Man of the Mass.. - தளபதி விஜய்யின் இயக்குநர் அட்லியின் Fan Boy Moment..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் திரைத்துறையில் அறிமுகமாகி 27 ஆண்டுகள் கடந்துள்ளதை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Atlee and Rathnakumar wishes Thalapathy Vijay completes his 27 years of Vijayism

தமிழ் சினிமாவில் முதன் முறையாக நடிகர் விஜய் ஹீரோவாக அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படம் ரிலீசாகி 27 ஆண்டுகள் ஆன நிலையில், ரசிகர்கள் அதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், இது குறித்து பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை நடிகர் விஜய்க்கு தெரிவித்து வருகின்றனர். அதில், குறிப்பாக விஜய் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படங்களான ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய படங்களை இயக்கிய, நடிகர் விஜய்யின் தீவிர ரசிகருமான இயக்குநர் அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டில், ‘27Years வேற லெவல்ணா .. எப்பவுமே எங்கள inspire பண்றீங்க.. லவ் யூ அண்ணா..’ என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், ‘ஆடை’ திரைப்பட இயக்குநரும், ‘தளபதி 64’ படத்தின் திரைக்கதாசிரியருமான ரத்னகுமாரும் தனது ட்விட்டர் பக்கத்தில், அவரோட சினிமா பயணத்திற்கு இன்றுடன் 27 வயசுஆகுது.. ஆனா அவரு அதைவிட இன்னும் இளமையா தான் இருக்காரு. எப்பவுமே எங்கள inspire பண்ணிக்கிட்டே. எங்க தங்க தளபதி..’ என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ‘கைதி’ திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ‘தளபதி 64’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் பேனரில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்.

மேலும், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி, விஜே ரம்யா, டிக் டாக் புகழ் லிண்டு ரோணி, கல்யாணி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.