அசோக் செல்வனுக்காக பஞ்சாயத்து பண்ணும் விஜய் சேதுபதி- ஓ மை கடவுளே ஸ்நீக் பீக் வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை கடவுளே திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 14) வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை ஆக்செஸ் ஃபிலிம் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்க, விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ள நிலையில், இந்த படத்தில் இருந்து ஸ்நீக்பீக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அசோக் செல்வன் தன் திருமண வாழ்வில் உள்ள கஷ்டங்களை தெரிவிக்க, அதற்கு விஜய் சேதுபதி பஞ்சாயத்து செய்வது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
அசோக் செல்வனுக்காக பஞ்சாயத்து பண்ணும் விஜய் சேதுபதி- ஓ மை கடவுளே ஸ்நீக் பீக் வீடியோ வீடியோ