www.garudabazaar.com

Manimegalai : "pregnant-ஆ".. குக் வித் கோமாளி Quit பண்ணது ஏன்..? மணிமேகலை Byte! Video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி 4 ஆவது சீசனில் மைம் கோபி, விசித்ரா, ஷெரின், ராஜ் ஐயப்பா, காளையன், கிஷோர் ராஜ்குமார், சிவாங்கி, ஸ்ருஷ்டி டாங்கே, விஜே விஷால், ஆண்ட்ரியா நவுரிகட் உள்ளிட்ட 10 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர். இவர்களுடன் பழைய மற்றும் புதிய கோமாளிகளும் கோதாவில் இறங்கியுள்ள சூழலில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி இன்னும் அமர்க்களமாக சென்று கொண்டிருக்கிறது.

Manimegalai byte after quitting Cook With Comali 4

முன்னதாக கடந்த மூன்று சீசன்களிலும் குக் வித் கோமாளி தொடரில் கலந்துகொண்டு பெரும் வரவேற்பை பெற்ற மணிமேகலை சில நாட்களுக்கு முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில்,"இனி நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரமாட்டேன் என்பதை நானே வருவேன் கெட்டப் மூலமாக அறிவிக்கிறேன். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் என் முதல் எபிசோடிலிருந்து என்னுடைய எல்லா பெர்ஃபாமன்ஸ்களுக்கும் நீங்கள் அன்பும் ஆதரவும் அளித்திருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். எனக்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புகளிலும் நான் அதிக கவனம் செலுத்தி சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறேன். குக் வித் கோமாளியில் உங்களை கொஞ்சம் மகிழ்வித்திருப்பேன் என நம்புகிறேன். நான் இனிமேலும் உங்கள் அன்பை எதிர்பார்க்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மணிமேகலையும் அவரது கணவர் ஹூசைனும், சொந்த ஊரில் பண்ணை வீடு கட்டுவதற்கு பாலக்கால் பூஜை செய்யும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர்.  இந்நிலையில் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட மணிமேகலை, பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ளார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட டைகர் கார்டன் தங்கதுரை, நாஞ்சில் விஜயன், விஜய் டிவி ராமர் என பலரும் பேசினார். 

இதில், “மணிமேகலை ஏன் குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறினார், மணிமேகலை கர்ப்பமா?” என்று வரும் செய்திகளுக்கு ரியாக்ட் பண்ணிய மணிமேகலை, “நான் குக் வித் கோமாளியை மிஸ் பண்ணுகிறேன்” என தெரிவித்தார். இதேபோல், டைகர் கார்டன் தங்கதுரை பேசும்போது, “மணிமேகலை குக் ஆவதற்காக முயற்சி செய்கிறார். ஆகவே அடுத்த 5வது சீசனில் குக்காக வருவார்” என குறிப்பிட்டார்.

MANIMEGALAI : "PREGNANT-ஆ".. குக் வித் கோமாளி QUIT பண்ணது ஏன்..? மணிமேகலை BYTE! VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Manimegalai byte after quitting Cook With Comali 4

People looking for online information on Cook With Comali 4, CWC Manimegalai, Mani Megalai, Manimegalai reason for quitting CWC will find this news story useful.