அறந்தாங்கி நிஷா அவமானத்திற்கு பயந்து ஒளித்து வைத்திருந்த வீடியோவை டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான மணிமேகலைக்கு ட்விட்டரில் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் அவர் விஜய் தொலைக்காட்சி பிரபலமான அறந்தாங்கி நிஷா பற்றிய வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்
அவமானத்துக்கு பயந்து நிஷா அக்கா ரொம்ப நாளா ஒளிச்சு வச்சிருந்த வீடியோ, எக்ஸ்க்ளூசிவாக உங்களுக்காக இதோ என்று தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் மணிமேகலையும், நிஷாவும் சேர்ந்து மொச்சைகொட்டை பல்லழகி முத்து முத்து சொல்லழகி பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார்கள். இருவரும் ஒரு பெஞ்ச் மீது ஏறி ஆட நிஷா கால் தவறி கீழே விழுகிறார்.
Avamaanathuku bayandhu Nisha akka romba naala olichu vachurundha video 🙊 Exclusive aga ungalukaga idho 🙌😁 pic.twitter.com/ghO4ilPbse
— MANIMEGALAI (@iamManimegalai) June 23, 2019