www.garudabazaar.com

தன் படம் வெளியான தேதியில் தயாரிப்பாளர் மரணம் ..! கலங்கிய தமிழ்த் திரையுலகம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் தான் தயாரித்த திரைப்படம் வெளியான அதே தேதியில் மரணம் அடைந்துள்ளார்.

Puthu Nellu Puthu Nathu film Producer passed away

All images are subjected to © copyrights to their respective owners.

Also Read | "என்னை இங்கே வந்து பாருங்க 😍".. மாலத்தீவு கடற்கரையில் பிரபல 'துருவ நட்சத்திரம்' நடிகை! வைரல் VIDEO

1991-ஆம் ஆண்டில் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தமிழ்த் திரைப்படம் புது நெல்லு புது நாத்து. இந்த திரைப்படத்தில் ராகுல், சுகன்யா, நெப்போலியன், பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.

ஆர். செல்வராஜ் கதை எழுதிய இந்த படத்துக்கு பிரபல இயக்குநர் & நடிகர் பொன்வண்ணன் வசனம் எழுதினார்.

Puthu Nellu Puthu Nathu film Producer passed away

All images are subjected to © copyrights to their respective owners.

இப்படத்தை மூகாம்பிகா ஆர்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ்,  V.E.வடுகநாதன், C.N.ஜெய்குமார், M.இளவரசு ஆகிய தயாரிப்பாளர்கள் தயாரித்திருந்தனர். இவர்களுள் C.N.ஜெய்குமார் தற்போது (2023, மார்ச் 15-ஆம் தேதி) மரணம் அடைந்துள்ளார்.

Puthu Nellu Puthu Nathu film Producer passed away

All images are subjected to © copyrights to their respective owners.

புது நெல்லு புது நாத்து திரைப்படம் 15 மார்ச் 1991 அன்று வெளியாகி இருந்த நிலையில், அதே நாளில் 15 மார்ச் 2023 அன்று இப்படத்தின் தயாரிப்பாளர் C.N.ஜெய்குமார் மரணம் அடைந்துள்ள விஷயம் திரைப்படத் துறையினரை கண்கலங்கி நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Also Read | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட 'மீனா 40' நிகழ்ச்சியின் சூப்பர் டிரெய்லர்.. வீடியோ!

மேலும் செய்திகள்

Puthu Nellu Puthu Nathu film Producer passed away

People looking for online information on CN Jaykumar will find this news story useful.