www.garudabazaar.com

Sivaangi : "வேகமாக பரவுது".. 2 நாள் தொடர் காய்ச்சல் .. மீண்டு வந்த சிவாங்கி ரசிகர்களுக்கு அலெர்ட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி சூப்பர் ஸ்டார் சிங்கர் மூலம் பிரபலம் ஆகி, கோமாளியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்தவர் சிவாங்கி. இவரது குழந்தைத் தனமான பேச்சும், சிரித்துக் கொண்டே எப்போதும் இருப்பதும் தான், பலரையும் கவர்ந்திருந்தது.

Cook With Comali 4 Sivaangi suffered by fever and alerted fans

இந்த நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டான்' படத்திலும் சிவாங்கி நடித்திருந்தார்.  இவருக்கு பல ரசிகர்கள் இவருடைய பாடல், நடிப்பு மற்றும் நகைச்சுவை உள்ளிட்ட பல விஷயங்களுக்காகவே ஏராளமாய் இருக்கின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சிறந்த எண்டர்டெயினராகவும் சிவாங்கி வலம் வருகிறார்.

இதற்கு முந்தைய குக் வித் கோமாளி சீசன்களில் சிவாங்கி கோமாளியாக பங்கேற்று இருந்தார். தற்போதைய குக் வித் கோமாளி 4வது சீசன் நிகழ்ச்சியில் சிவாங்கி போட்டியாளராக வலம் வருகிறார்.  இந்தநிலையில்தான் சிவாங்கிக்கு தனக்கு அண்மையில் பெரும் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் வந்து விட்டதாகவும் இரண்டு நாட்களாக சிரமப்பட்டதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். எனினும் ரசிகர்களின் பேரன்பால் அதிலிருந்து மீண்டு வந்து விட்டதாகவும், ரசிகர்களின் அன்பு தன்னை இந்த நேரத்தில் நெகிழ்ச்சி அடைய வைத்ததாகவும், ரசிகர்கள் இல்லையேல் தான் இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார் சிவாங்கி.

மேலும் இந்த சமீப காலமாக இந்த காய்ச்சல் வெகுவேகமாக பரவி வருகிறது என்பதால் அனைவரும் மாஸ்க் அணிந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Cook With Comali 4 Sivaangi suffered by fever and alerted fans

People looking for online information on Cook with comali, Cook With Comali 4, CWC 4, Sivaangi will find this news story useful.