www.garudabazaar.com

குக் வித் கோமாளி நிகழ்ச்சி.. பாதியில் வெளியேறிய போட்டியாளர்..! இதுதான் காரணமா? Cook With Comali 4

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமான ஒன்று குக் வித் கோமாளி.

Cook With Comali 4 Vichitra went due to emrgency Call

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி ஷோ பார்க்கப்படும் நிலையில், இதன் சிறப்பம்சமாக இருப்பதே சீரியஸான விஷயமாக இருக்கும் சமையலை மிகவும் வித்தியாசமாக பொழுதுபோக்கு மற்றும் விறுவிறுப்பு அம்சங்களுடன் காண்பிப்பது தான்.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல செஃப்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் மிகவும் அரட்டை அடித்து அனைவரையும் கலாய்த்துக் கொண்டே இருப்பதால் நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யமாகவும் செல்கிறது.

இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து, 4 ஆவது குக் வித் கோமாளி சீசனும் தற்போது ஆரம்பமாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. முன்னதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனதுடன் ஏராளமான திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி 4 ஆவது சீசனில் மைம் கோபி, விசித்ரா, ஷெரின், ராஜ் ஐயப்பா, காளையன், கிஷோர் ராஜ்குமார், சிவாங்கி, ஸ்ருஷ்டி டாங்கே, விஜே விஷால், ஆண்ட்ரியா நவுரிகட் உள்ளிட்ட 10 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்தனர். இவர்களுடன் பழைய மற்றும் புதிய கோமாளிகளும் கோதாவில் இறங்கியுள்ள சூழலில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி இன்னும் அமர்க்களமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், குக் வித் கோமாளியில் முதல் எலிமினேஷனும் தற்போது நடந்தது. முன்னதாக, 10 போட்டியாளர்களில் இருந்து கிஷோர் ராஜ்குமார், காளையன் மற்றும் ஷெரின் ஆகியோர் எலிமினேஷன் சுற்றுக்கு சென்றனர். இதனையடுத்து, காளையன் இதிலிருந்து முதல் ஆளாக Save ஆக, இறுதியில் ஷெரின் மற்றும் கிஷோர் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேறும் சூழல் உருவாகி இருந்தது. பின்னர் இவர்களுள் கிஷோர் எலிமினேட் ஆனதாக நடுவர்கள் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் அறிவித்தனர்.

இந்நிலையில் இந்த வாரம் immunity band பெறுவதற்கான போட்டிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கென வழக்கம் போல கோமாளிகள், போட்டியாளர்கள், நடுவர்கள் அனைவரும் தயாரான நிலையில்,  பிரபல போட்டியாளர் 90ஸ் நடிகை விசித்ரா பாதியில் வெளியேறினார்.

அவரது குடும்பத்தில், அவரது அம்மாவுக்கு டல்நிலை சரியில்லை என எமெர்ஜன்சியாக போன் அழைப்பு வந்ததால் அவர் பாதியிலேயே சென்றுவிட்டதாக சக போட்டியாளர்கள் பேசிக்கொண்டனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Cook With Comali 4 Vichitra went due to emrgency Call

People looking for online information on Cook With Comali 4, Cook With Comali Season 4, Star vijay, Vijay tv will find this news story useful.