www.garudabazaar.com

தன் பட தயாரிப்பாளர் மரணம் ..! இறுதிச் சடங்கில் கலங்கி அழுத இயக்குநர் பாரதிராஜா..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் தான் தயாரித்த திரைப்படம் வெளியான அதே தேதியில் மரணம் அடைந்துள்ளார்.

Bharathiraaa Condolence Puthu Nellu Puthu Nathu Producer

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Interview -ல குடிச்சுட்டு வருவியா?.. ‘குடிமகான்’ படக்குழுவினர் ஜாலி பேட்டி.. வீடியோ

1991-ஆம் ஆண்டில் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தமிழ்த் திரைப்படம் புது நெல்லு புது நாத்து. இந்த திரைப்படத்தில் ராகுல், சுகன்யா, நெப்போலியன், பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.

ஆர். செல்வராஜ் கதை எழுதிய இந்த படத்துக்கு பிரபல இயக்குநர் & நடிகர் பொன்வண்ணன் வசனம் எழுதினார். இப்படத்தை மூகாம்பிகா ஆர்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ்,  V.E.வடுகநாதன், C.N.ஜெய்குமார், M.இளவரசு ஆகிய தயாரிப்பாளர்கள் தயாரித்திருந்தனர். இவர்களுள் C.N.ஜெய்குமார் தற்போது (2023, மார்ச் 15-ஆம் தேதி) உடல் நலக் குறைவால் மரணம் அடைந்துள்ளார்.

Bharathiraaa Condolence Puthu Nellu Puthu Nathu Producer

Images are subject to © copyright to their respective owners.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் தயாரிப்பு நிர்வாகியாக இருந்து பாரதிராஜா இயக்கத்தில் சுகன்யா அறிமுகமான "புது நெல்லு புது நாத்து" படத்தின் தயாரிப்பாளராக பணிபுரிந்தவர் சி.என்.ஜெய்குமார். இவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட இயக்குனர் பாரதிராஜா புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு , தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் , தயாரிப்பாளர் முரளி, நடிகர் மனோஜ் பாரதி மற்றும் திரைப்பட இயக்குனர்கள், தொழில் அதிபர்கள் செனாய் நகரில் உள்ள  இல்லத்தில் அவரது பூத உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். மறைந்த ஜெய்குமார், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி சண்முகத்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

புது நெல்லு புது நாத்து திரைப்படம் 15 மார்ச் 1991 அன்று வெளியாகி இருந்த நிலையில், அதே நாளில் 15 மார்ச் 2023 அன்று இப்படத்தின் தயாரிப்பாளர் C.N.ஜெய்குமார் மரணம் அடைந்துள்ள விஷயம் திரைப்படத் துறையினரை கண்கலங்கி நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Also Read | தன் படம் வெளியான தேதியில் தயாரிப்பாளர் மரணம் ..! கலங்கிய தமிழ்த் திரையுலகம்..

தொடர்புடைய செய்திகள்

Bharathiraaa Condolence Puthu Nellu Puthu Nathu Producer

People looking for online information on Bharathiraaa, CN Jaykumar, Puthu Nellu Puthu Nathu will find this news story useful.