www.garudabazaar.com

குக் வித் கோமாளி மணிமேகலை-க்கு Accident-ஆ? - என்ன ஆச்சு?.. அவரே வெளியிட்ட பரபரப்பு photos & Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல விஜேவாக அறியப்பட்ட பின்னர், தொலைக்காட்சி பிரபலமாக ட்ரெண்டாக இருந்து வருபவர் மணிமேகலை.

CWC Manimegalai shared car accident photos and videos shocking

விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற மணிமேகலை, தற்போது ஒரு எண்டர்டெயினராக மக்களிடையே இன்னும் நல்ல வரவேற்ப்பை பெற்று ரீச் ஆனார். தவிர சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார் மணிமேகலை. சின்னத்திரை பிரபலங்களாக இருந்து வரும் மணிமேகலை மற்றும் அவருடைய காதல் கணவர் ஹூசேன் இருவரையுமே ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் பின் தொடர்கின்றனர்.

இந்த நிலையில்தான் விஜே மணிமேகலை சில நாட்களுக்கு முன், தான் விபத்துக்குள்ளாகி, அந்த விபத்திலிருந்து உயிர் பிழைத்த சம்பவத்தைப் பற்றி, தம்முடைய ரசிகர்களிடையே பகிர்ந்திருக்கிறார். இதைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மணிமேகலைக்கு விபத்தா? என்ன நடந்தது என்று தொடர்ச்சியாக கேட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மணிமேகலை தம் வீடியோவில், “ஒரு விபத்தில் ஜஸ்ட் மிஸ்-ல உயிர் பிழைத்து நான் வந்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம், வெளியே சென்று கொஞ்சமாவது என்ஜாய் பண்ணலாம் என்று நினைத்து வெளியே சென்றால், நீ என்ன ரிலாக்ஸ் பண்றது என்பது போல் ஒரு சம்பவம் நடக்கும்ல? அப்படி ஒரு சம்பவம் தான் நடந்தது.

ஆம், நான் பாட்டுக்கு மெதுவாகதான் காரில் சென்று கொண்டிருந்தேன். பார்த்தால் ஒரு லாரி, டோல் பூத் அருகே, லைட்டாக வந்து கார் மீது விட்டுவிட்டார்கள். காரின் முன்பக்கம் கொஞ்சம் காலி. கொஞ்சம் காலி தான். ஆனால் ஷோரூமில் சென்று, காரை விட்டால் பர்ஸ் முழுவதையும் காலி செய்து விடுவார்கள்.

அந்த அளவுக்கான சேதாரம்தான் அது” என்று குறிப்பிட்டிருக்கும் மணிமேகலை விபத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களிடம் காண்பிக்கிறார். அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் விபத்து சம்பவத்தை கண்முன் கொண்டு வருகின்றன.

மேலும் இதுகுறித்து பேசிய மணிமேகலை, “2021-ல யார் முகத்தில் முழித்தேன் என்று தெரியவில்லை. சுடு தண்ணி கொட்டுது. தேவையில்லாதது எல்லாம் நடக்குது. நான் பாட்டுக்கு ஊருக்கு போய் லாக் ஆகுறேன். கார் எடுத்துக்கொண்டு போனா கூட இப்படியான ஒரு பிரச்சனை வருகிறது.

என்னதான் பிரச்சனை இந்த 2021க்கு  என்பதுதான் எனக்கு புரியவில்லை. இந்த வருஷம் முடியப் போகும் போது, நான் பட்டாசு வெடித்து வேற லெவல்ல கொண்டாடப் போகிறேன். இதுதான் இருப்பதிலேயே ஒரு வொர்ஸ்ட்டான வருடம்” என்று குறிப்பிட்டிருக்கிறார் .

இதே விபத்து சம்பவத்தின் போது இன்னொரு சம்பவமும் நடந்திருக்கிறது. ஆமாம் “என்னக்கா எண்ணையை ஊற்றுவதற்கு முன்பாக.. கடுகு போட்டு தாளிக்கிறீங்க? உங்க வீட்டில் யார் சமைப்பார்கள்?” என்று ரசிகர் ஒருவர் அந்த விபத்து சம்பவத்தின்போது தன்னை கேட்டதாகவும், அந்த அளவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மக்களிடையே ரீச் ஆகி இருக்கிறது, ஆனால் நான் ரீச் ஆகாமல் போய் விட்டேனே என்று மணிமேகலை fun ஆக கதறுகிறார்.

இப்படி ஜாலியாக பேசும் மணிமேகலை, இந்த 2001 மிகவும் மோசமாக இருப்பதாகவும், அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் ஒரு சீரியசான அட்வைஸை கொடுத்திருக்கிறார். அதன் பின்னர் விபத்துக்குள்ளான இந்த காரினை மீண்டும் சர்வீஸ்க்கு எடுத்துச் சென்று புதிய கார் போல் வெளியில் எடுத்து வரும் வீடியோவையும் பதிவிட்டு இருக்கிறார்.

மணிமேகலை ஹுசேன் தம்பதியர் எப்போதுமே க்யூட்டாக, ரகளையும் fun-ம் பண்ணிக்கொண்டு பலருக்கும் பிடித்தமான தம்பதியராக சின்னத்திரை உலகில் திகழ்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் இன்னொரு வீடியோவில் இவர்கள் இருவரும் காரில் பயணித்து வரும் போது பின்னணியில் சூரிய வம்சம் படத்தில் வரும் நட்சத்திர ஜன்னலில் பாடல் ஒலிக்க, இது தங்களுடைய மோட்டிவேஷனல் பாடல் என்றும் கேப்ஷனில் மணிமேகலை பதிவிட்டு இருந்தார்.

குக் வித் கோமாளி மணிமேகலை-க்கு ACCIDENT-ஆ? - என்ன ஆச்சு?.. அவரே வெளியிட்ட பரபரப்பு PHOTOS & VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

CWC Manimegalai shared car accident photos and videos shocking

People looking for online information on Actress Car Accident, Anchor, BiggBossTamil5, CookWithComali2, Manimegalai, Manimegalai car accident, Manimegalai hussain, Trending, Vijay tv, Vijay TV Manimegalai, VijayTelevision, VJ Manimegalai will find this news story useful.