அனல் பறக்கும் அரசியலில் அதிரடி காட்டும் சூர்யா- ரசிகர்களை மிரள வைத்த என்.ஜி.கே டிரைலர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியாகியுள்ளது.

Selvaraghvan-Suriya's NGK Trailer and Audio has been out now

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள ‘என்.ஜி.கே’ என்கிற ‘நந்த கோபாலன் குமார்’ திரைப்படம் வரும் மே.31ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றதையடுத்து, இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை தற்போது வெளியாகியுள்ளது.

அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘என்.ஜி.கே’ ரிலீசுக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கும் சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக வெளியாகியுள்ள ‘என்.ஜி.கே’ டிரைலரை ரசிகர்கள் உற்சாகமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.  

அனல் பறக்கும் அரசியல் களத்தில் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

அனல் பறக்கும் அரசியலில் அதிரடி காட்டும் சூர்யா- ரசிகர்களை மிரள வைத்த என்.ஜி.கே டிரைலர்..! வீடியோ