'என்னைக்குமே என் கேரக்டர் மாறவில்லடா' - இதோ சிம்புவின் உத்தமன் Anthem!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மஹத் நடிக்கும் இவன் தான் உத்தமன் படத்தில் சிம்பு பாடிய 'டேய் மாமே' பாடல் வெளியாகியுள்ளது.

mahat simbu's new song dei mamae from ivan than uthaman is out

நடிகர் சிம்பு நடிப்பது மட்டுமன்றி பாடல்கள் பாடுவதிலும் சிறந்து விளங்குபவர். தனது படங்களை தவிர்த்து, பிற ஹீரோக்களின் படங்களிலும் சிம்பு பாடி வருகிறார். அண்மையில் சித்தார்த் நடிக்கும் டக்கர் படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியிருந்தார்.

இந்நிலையில் மஹத் நடிக்கும் இவன் தான் உத்தமன் படத்தில் சிம்பு பாடிய பாடல் வெளியாகியுள்ளது. டேய் மாமா எனும் இப்பாடலுக்கு தமன் இசையமைத்திருக்கிறார். மணி அமுதவன் வரிகள் எழுதியிருக்கிறார். மஹத் படத்தில் இப்பாடல் வந்திருந்தாலும், சிம்புக்கு ஏற்ப வரிகள் அமைந்திருக்கிறது. யாஷிகா ஆனந்த், மாகாபா ஆனந்த், மனோபாலா, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கிறார் இயக்குநர் மேக்வென்.

Entertainment sub editor