லாஸ்லியாவுக்கு ஹீரோவாகும் இந்தியன் கிரிக்கெட்டர்–அந்த அதிர்ஷ்டக்கார படம் இது தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய கிரிக்கெட் அணியில் பிரபலமான வீரர் ஹர்பஜன் சிங். தனது விளையாட்டுத் திறமையால் இந்தியா முழுதும் ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் இவர் தமிழில் ஸ்டேட்டஸ் போட்டு வந்ததால் தமிழ் மக்களுக்கு நெருக்கமானார்.

Losliya, Harbajan singh big boss indian cricketer friendship movie tamil

இந்நிலையில் ஹர்பஜன் சிங் நடிகர் சந்தானத்தின் டிக்கிலோனா படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் தற்போது ஹர்பஜன் ஒரு தமிழ் படத்தில் சோலோ ஹீரோவாக நடிக்கிறார். சியண்டோவா ஸ்டுடியோ, சினிமா ஸ்டுடியோ நிறுவனகள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு ஃப்ரெண்ஷிப் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

ஜான் பவுல் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இந்த படத்தை இயக்குகின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியான நிலையில் தற்போது அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிகிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

Entertainment sub editor