www.garudabazaar.com

செஸ் ஒலிம்பியாடுக்காக சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படக்குழு வெளியிட்ட புதிய வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் படக்குழு செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளது.

Maaveeran Mahaveerudu Movie Team Release Chess Olympiad Video

Also Read | சூஃபி கவிஞர் ரூமியின் கவிதையுடன் மாலத்தீவு கடற்கரையில் வேதிகா பிகினி போட்டோஷூட்!

சென்னை மகாபலிபுரத்தில் வைத்து, 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், இனறு (28.07.2022) ஆரம்பமாகி உள்ளது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி & தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதில், பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 2,000 வீரர் மற்றும் வீராங்கனைகள் வரை பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் 30 வீரர் மற்றும் வீராங்கனைகள் 6 பிரிவுகளாக களமிறங்க உள்ளார்கள்.

Maaveeran Mahaveerudu Movie Team Release Chess Olympiad Video

மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தமிழக அரசு சார்பில் நடைபெற்றிருந்தது. உள்ளரங்க அமைப்பு, வீரர்களுக்கான தங்குமிடம் மற்றும் உணவு ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் படக்குழு செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளது. Mango Post சென்னை இந்த வீடியோவை தயாரித்துள்ளது. மோகன் பாபு பழனி இந்த  வீடியோவை இயக்கியுள்ளார். போர்க்களத்தில் போர்வீரர்களின் ராஜபாட்டை இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

Maaveeran Mahaveerudu Movie Team Release Chess Olympiad Video

சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த மாவீரன் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாத மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | VIDEO: Once Upon a Time பாடலுடன் வெளியான 'விக்ரம்' படத்தின் சரவெடியான சண்டைக்காட்சி!

செஸ் ஒலிம்பியாடுக்காக சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படக்குழு வெளியிட்ட புதிய வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Maaveeran Mahaveerudu Movie Team Release Chess Olympiad Video

People looking for online information on Maaveeran, Sivakarthikeyan, SivaKarthikeyan Maaveeran Movie will find this news story useful.