சிம்புவின் 'மாநாடு' - ''ப்பா என்ன கதை...'' - பிரபல ஹீரோ கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்பு தனது பிறந்தநாளை 'மாநாடு' டீமுடன் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் சிம்பு ரசிகர்களால் வைரலாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 'மாநாடு' படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டார்.

Simbu, Venkat Prabhu Maanaadu, SJ Suryah Comments about Story

அதன் படி இந்த படத்தில் இயக்குநர் பாராதிராஜாவின் மகனும், பிரபல நடிகருமான மனோஜ் பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் போப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா, ''நன்றி தயாரிப்பாளர் சார். வெங்கட் பிரபு, என்ன கதை, என்ன நரேஷன். இந்த படம் கண்டிப்பாக சிறப்பான எல்லைகளை அடையும். என் நண்பர் சிம்புவுடன் இணைவதில் மகிழ்ச்சி'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor