Yaanai

போடு..விஜய் சேதுபதி நடித்த மாமனிதன்.. படத்தின் OTT உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மாமனிதன்' திரைப்படம் கடந்த ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Maamanithan Movie OTT Rights Bagged by Aha Tamil

Also Read | “வாடிவாசல்-க்காக சூர்யா இந்த Home Work-லாம்…” விருது மேடையில் சீக்ரெட் சொன்ன வெற்றிமாறன்

இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய தென்மேற்குப் பருவக் காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி, தென் மேற்குப் பருவக்காற்று திரைப்படத்துக்குப் பின் சீனு ராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல், தர்மதுரை மற்றும் மாமனிதன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதில் இடம்பொருள் ஏவல் திரைப்படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. தர்மதுரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தர்ம துரை படத்துக்கு அடுத்து சீனு ராமசாமி - விஜய் சேதுபதி மாமனிதன் படத்தில் இணைந்துள்ளனர்.

மாமனிதன் படத்துக்காக இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் ஷங்கர் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

Maamanithan Movie OTT Rights Bagged by Aha Tamil

யுவன் சங்கர் ராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான YSR பிலிம்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்து இருந்தார். ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலம் இந்த படம் தமிழகம் மற்றும் கேரளாவில் வினியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மாமனிதன் படத்தின் டிஜிட்டல் ஓடிடி உரிமையை ஆஹா ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

திரை பிரபலங்கள் பலரும் இப்படத்தை வாழ்த்தி இயக்குனருக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | நாய் குட்டியுடன் ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்டில் அசத்திய கீர்த்தி சுரேஷ்.. செம்ம வைரல் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Maamanithan Movie OTT Rights Bagged by Aha Tamil

People looking for online information on Aha Tamil, Maamanithan Movie, OTT Rights, Vijay Sethupathi will find this news story useful.