Yaanai

குழந்தை நல்லா வளர்ந்துடுச்சே.. நடிகை ஸ்ரேயா பகிர்ந்த குழந்தையின் லேட்டஸ்ட் வைரல் போட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் “உனக்கு 20 எனக்கு 18”  திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரேயா.

Shriya sharan with her daughter Radha

Also Read | போடு..விஜய் சேதுபதி நடித்த மாமனிதன்.. படத்தின் OTT உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி” படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பிரபலமானவர். கடைசியாக தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் ராஜமௌலி இயக்கத்தில் RRR படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடித்த நரகாசூரன் படம் வெளியீட்டிற்கு காத்திருக்கிறது.

இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Shriya sharan with her daughter Radha

தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வதை வாடிக்கையாக செய்து கொண்டிருப்பார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் நிலவுகிறது.

தனக்கு குழந்தை பிறந்துவிட்டதாக சில  மாதங்களுக்கு முன் ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அந்த அளவுக்கு தனது குழந்தைப் பிறப்பு குறித்து எந்த ஒரு செய்தியையும் அதுவரை பகிராமல் ஸ்ரேயா சசரண் அமைதி காத்தார்.

Shriya sharan with her daughter Radha

மேலும் குழந்தை 2020 ஆம் ஆண்டு லாக்டவுனில் பிறந்ததாகவும், குழந்தைக்கு ராதா எஸன பெயரும் தற்போது குழந்தைக்கு 2 வயது ஆகுவதாகவும் தெரிகிறது. தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஸ்ரேயா சரண் குழந்தையுடன் விளையாடுவது போன்ற போட்டோவை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இதனை பதிவிட்டுள்ளார்.

Also Read | வெயில் காலம்.. பிரியா பவானி சங்கர் நடத்திய போட்டோஷூட்.. காஸ்டியூம் தான் ஹைலைட்!

தொடர்புடைய இணைப்புகள்

Shriya sharan with her daughter Radha

People looking for online information on Shriya, Shriya Sharan Latest Pictures, Shriya sharan shared her daughter pictures will find this news story useful.