www.garudabazaar.com

Oscars 2023 : "சல்யூட்..!".. ஆஸ்கார் விருது வென்ற இந்தியர்களை வாழ்த்திய ரஜினி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், திரையுலகின் மிக உயிரிய விருதான ஆஸ்கார் விருது வழங்கும் விழா தொடங்கியது.

salute to the proud Indians getting Oscar Says Rajinikanth

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சிறந்த திரைப்படத்துக்கான விருது பெற்ற All Quiet on the Western Front படம் சொல்வது என்ன..?

இந்த 95வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் விருது வென்றுள்ளது. இதேபோல், முதுமலையில் தயாரான ‘The Elephant Whisperers’ ஆவணப்படம் சிறந்த ஆவண குறும்பட பிரிவில் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. RRR திரைப்படம் பல மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர்.

salute to the proud Indians getting Oscar Says Rajinikanth

Images are subject to © copyright to their respective owners.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது. இப்படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார். பாடலாசிரியர் சந்திரபோஸ் நாட்டு நாட்டு தெலுங்கு வரி பாடலை எழுதினார். இதனால் இவர்கள் இருவருக்கும் நாட்டு நாட்டு பாடலுக்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன.

salute to the proud Indians getting Oscar Says Rajinikanth

Images are subject to © copyright to their respective owners.

இதேபோல் முதுமலையில் தயாரான ‘The Elephant Whisperers’ சிறந்த ஆவண குறும்பட பிரிவில் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. தமிழகத்தின் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி தம்பதி குறித்தும், அவர்களுக்கு யானையுடனான உறவு குறித்தும் உருக்கமாக இந்த ஆவணப்படத்தை இயக்கியிருந்தார் கார்த்திகி கொன்சால்வ்ஸ். இந்த ஆவணப்படத்தை தயாரித்திருந்தார் குனீத் மோங்கா.

salute to the proud Indians getting Oscar Says Rajinikanth

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், “பெருமைக்குரிய ஆஸ்கார் விருதுபெறும்   திருமிகு கீரவாணி, திருமிகு ராஜமௌலி  மற்றும் திருமிகு கார்த்திகி கோன்சால்வேஸ் ஆகியோருக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். பெருமை மிகு இந்தியர்களுக்கு சல்யூட் செய்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Also Read | Oscar 2023 : ஆஸ்கார் விருதை தட்டித் தூக்கிய அவதார் 2 .. எந்த பிரிவில்.? Avatar: The Way of Water

தொடர்புடைய இணைப்புகள்

salute to the proud Indians getting Oscar Says Rajinikanth

People looking for online information on MM Keeravani, Naatu Naatu, Oscars 2023, Rajinikanth, SS Rajamouli will find this news story useful.