www.garudabazaar.com

"நாம சாதிச்சுட்டோம்".. ஆஸ்கர் விருதுடன் ஜூனியர் NTR.. உருக்கமான பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆஸ்கர் விருதுடன் ஜூனியர் NTR பகிர்ந்துள்ள புகைப்படம் தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

Junior NTR Congratulate MM Keeravani and Crew of RRR

Images are subject to © copyright to their respective owners.

Also Read | The Elephant Whisperers : ஆஸ்கர் வென்ற இந்திய பெண்கள்.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி போஸ்ட்.. !

ஆஸ்கர் 2023

சினிமா கலைஞர்களின் உச்சபட்ச கனவாக இருக்க கூடியது ஆஸ்கர் விருதை வெல்வதாகத்தான் இருக்கும். உலகம் முழுவதிலும் இருந்து சிறந்த திரைபடங்களை, கலைஞர்களை அங்கீகரித்து விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சையுடன் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். இதில் RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

Junior NTR Congratulate MM Keeravani and Crew of RRR

Images are subject to © copyright to their respective owners.

RRR

RRR திரைப்படம் பல மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது. இந்த படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார்.

கீரவாணி

பிரபல இசையமைப்பாளர் மரகதமணி எனும் கீரவாணி இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.

Junior NTR Congratulate MM Keeravani and Crew of RRR

Images are subject to © copyright to their respective owners.

இந்த படம் சிறந்த பாடல் மற்றும் சிறந்த அந்நிய நாட்டு திரைப்படம் ஆகிய இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இதில் சிறந்த பாடலுக்கான விருதை நாட்டு நாட்டு பாடல் வென்றது. இசையமைப்பாளர் கீரவாணி விருதை பெற்றுக் கொண்டார். அது முதல் ஆஸ்கரை வெல்லுமா நாட்டு நாட்டு பாடல்? என ரசிகர்களுக்கு மத்தியில் கேள்வி எழுந்தது. கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதை வென்றிருக்கின்றனர்.

ஜூனியர் NTR-ன் பதிவு

இந்த சூழ்நிலையில் ஜூனியர் NTR தனது ட்விட்டர் பக்கத்தில் ஆஸ்கர் விருதுடன் தான் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். மேலும், அவர் எழுதியுள்ள பதிவில்,"நாம் சாதித்துவிட்டோம். MM கீரவாணி, ராஜமௌலி, சந்திரபோஸ் படக்குழு மற்றும் தேசத்திற்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த பதிவு அவரது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read | Naatu Naatu : ஆஸ்கார் விருது பெற்ற பின்.. MM கீரவாணி பாடிய பாடல்.. வீடியோ..!

தொடர்புடைய இணைப்புகள்

Junior NTR Congratulate MM Keeravani and Crew of RRR

People looking for online information on Junior NTR, MM Keeravani, Oscar 2023, RRR will find this news story useful.