www.garudabazaar.com
iTechUS

Oscars 2023 : "மொத்தமா 3 ஆஸ்கார் நாமினேஷன்".. இந்தியாவிற்கு பெருமை சேர்த்த படைப்புகள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆஸ்கார் விருதுக்கான நாமினேஷன் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து 3 படைப்புகள் இதில் தேர்வாகி உள்ளது.

Three nomination from india in Oscars 2023 historical day

Also Read | Bigg Boss வீட்டில் இருந்து வந்த பிறகு.. Vikraman பகிர்ந்த வீடியோ.. ரசிகர்களுக்கு சொன்ன சூப்பர் நியூஸ்

பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி இருந்த "RRR" திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் NTR, அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

உலகளவில் RRR திரைப்படம் கவனம் பெற்றிருந்த நிலையில், உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான கோல்டன் குளோப் விருது விழாவில், சிறந்த பாடலுக்கான விருதை "நாட்டு நாட்டு" பாடல் வென்றிருந்தது. இந்த விருதை இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக் கொண்டார். இதற்கடுத்து ஆஸ்கார் அகாடமி விருதுகளிலும் RRR படம் மற்றும் நாட்டு நாட்டு பாடல் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

அப்படி ஒரு சூழலில், தற்போது ஆஸ்கார் நாமினேஷன் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், ஒரிஜினல் சாங் என்ற பிரிவில், RRR படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடல் தேர்வாகி உள்ளது. கோல்டன் குளோப் விருதை வென்றது போல, ஆஸ்கார் விருதையும் நாட்டு நாட்டு பாடல் வெல்லும் என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் உள்ளனர்.

Three nomination from india in Oscars 2023 historical day

இந்த நிலையில், RRR படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடலை தவிர, மற்ற இரண்டு இந்திய படைப்புகளும் ஆஸ்கார் விருதுகள் பட்டியலில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது.

இதில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட இரண்டு ஆவண படங்கள் அகாடமி விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் தேர்வாகி உள்ளது. ஷௌனக் சென் இயக்கத்தில் உருவாகி உள்ள "All That Breathes" என்ற ஆவணப்படம், "Documentary Feature Film" என்ற பிரிவில் அகாடமி விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள இரண்டு சகோதரர்கள், பறவைகளை பராமரிப்பதில் நேரத்தை செலவிடுவது பற்றி இந்த படம் எடுத்துரைக்கிறது. ஏற்கனவே கேன்ஸ் திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறைய சர்வதேச விருதுகளை All That Breathes வென்றுள்ளது.

Three nomination from india in Oscars 2023 historical day

Images are subject to © copyright to their respective owners.

அப்படி ஒரு சூழலில் தற்போது ஆஸ்கார் விருதுக்கும் நாமினேட் செய்யப்பட்டுள்ளதால், நிச்சயம் வெற்றி பெறும் என்ற ஆவலிலும் ரசிகர்கள் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ் (The Elephant Whisperers) என்ற கார்த்திக்கி கோன்சால்வ்ஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள ஆவணப்படமும், Documentary Short Film என்ற பிரிவில், ஆஸ்கார் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் உள்ள வயதான தம்பதியர் யானைகளை வளர்ப்பது பற்றியும், அவர்களுக்கு இடையே பாசப் பிணைப்பையும் கொண்டு இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Three nomination from india in Oscars 2023 historical day

Images are subject to © copyright to their respective owners.

ஆஸ்கார் விருது மேடையில் 3 நாமினேஷன் பிரிவில் இந்தியாவில் இருந்து படைப்புகள் தேர்வாகி உள்ளதால், அவை அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என இந்திய மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். 95 ஆவது ஆஸ்கார் விருதுகள், இந்திய நேரப்படி மார்ச் மாதம் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "ஆஸ்கார் மேடையில் ஒலிக்குமா நாட்டு நாட்டு?".. நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்ற பெயர்..!!

தொடர்புடைய இணைப்புகள்

Three nomination from india in Oscars 2023 historical day

People looking for online information on AllThatBreathes, NaatuNaatu, RRR, TheElephantWhisperers will find this news story useful.