www.garudabazaar.com

"அப்பவே 107 தியேட்டர்ல".. ரீ ரிலீஸ் ஆகும் ரஜினியின் பாபா.. 50வது நாள் Throwback போஸ்டர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 2002-இல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா உள்ளிட்ட ரஜின்காந்த்தின் தொடர் வெற்றிப்படங்களை அடுத்து நான்காவது முறையாக பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.

Baba was running 107 theatres record breaking 50th day poster

கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில்  கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.  பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணிபுரிந்தனர்.

Baba was running 107 theatres record breaking 50th day poster

மகா அவதாரமான பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், வெளியான சமயத்தில், பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி அடிக்கடி காட்டும் அந்த பாபா முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளையும் வசீகரித்து, இப்போதுவரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்தப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங்  செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Baba was running 107 theatres record breaking 50th day poster

முன்னதாக பாபா படம் குறித்து பிஹைண்ட்வுட்ஸில் பேசிய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, “இப்போது இருக்கும் ஆடியன்ஸுக்கு இந்த படம் பார்ப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. இந்த படம் எந்த ஓடிடியிலும் இல்லை. யூடியூபிலும் இல்லை. அதிர்ஷ்டவசமாக டிவியில் ஒரே ஒருமுறைதான் போடப்பட்டதாக தெரிகிறது. இந்த படம் ரஜினி சாரின் ப்ரொடக்ஷனில் உருவான திரைப்படம். அவர் எங்கேயும் கொடுக்கவில்லை. அந்த திரைப்படத்தை அவரே வைத்துக் கொண்டிருந்தார். எனவேதான் ரஜினி சார் இந்த திரைப்படத்தை இப்போது ரிலீஸ் பண்ணலாம் என்று சொன்னபோது நிச்சயமாக பண்ணி விடலாம் என்று கூறினேன்.

அங்கங்கே இருக்கும் சில காட்சிகளையும், பாடல்களையும் மட்டுமே இந்த தலைமுறையினர் பார்த்திருப்பார்கள். இந்த திரைப்படத்தை ஒரு தலைமுறை பார்க்காமல் இருந்திருக்கிறது எனும் பொழுது அவர்கள் இந்த திரைப்படத்தை பிரஷ்ஷாக பார்ப்பார்கள். அப்போதுதான் என்ன விதமான சர்ச்சைகளை குறிப்பிட்டு பாபா படம் அன்றைய தினத்தில் சில ரெஸ்பான்ஸை சம்பாதிக்காமல் விட்டதோ அவற்றையெல்லாம் இப்போது சம்பாதிக்கும்.

Baba was running 107 theatres record breaking 50th day poster

அபோதைய சர்ச்சை மற்றும் குழப்பங்கள் பலவற்றால் இந்த திரைப்படத்துக்கான உண்மையான மெரிட் அப்போது கிடைக்கப்பெறவில்லை. இப்போது இந்த படம் ரிலீசானால் நிச்சயமாக அண்ணாமலை, பாஷா போன்ற சூப்பர் ஹிட் படங்கள் வரிசையில் இந்த படம் சேரும்.” என தெரிவித்தார். மேலும் தற்போது ரிலீஸ் ஆகவுள்ள பாபா படத்தின் நீளம் 2:30 மணி நேரத்துக்குள் சுருக்கப்பட்டதாகவும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில்  சூப்பர் ஸ்டார்ட் ரஜினிகாந்தின் பாபா படத்தின் 50வது நாள் போஸ்டரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டனர்.

Baba was running 107 theatres record breaking 50th day poster

2002-ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் சுமார் 107 திரையரங்குகளில் 50 நாட்கள் ஒளிபரப்பாகி ரெக்கார்டு பிரேக்கிங் சாதனையை பண்ணிய பாபா திரைப்படம் தற்போது 20 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் புதுப்பொலிவுடன் ரிலீஸ் ஆக போவது குறித்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Baba was running 107 theatres record breaking 50th day poster

People looking for online information on Baba, BabaRerelease, Rajinikanth, Suresh krishna will find this news story useful.