www.garudabazaar.com

இதான்ப்பா ‘ராமர் வீடு’.... KPY ராமர் இல்ல கிரகப்பிரவேசத்தில் பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் காமெடி நடிகர் ராமர். ராமரின் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா, ஆத்தாடி என்ன உடம்பு போன்ற காமெடி வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலம். இதனாலயே என்னம்மா ராம ர் என்றும் அழைக்கப்பட்டார்.

Vijay TV Ramar New Housewarming விஜய் டிவி ராமர் வீடு

ராமர் வீடு, சகள vs ரகள, ராமர் வீட்டு கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகள் ராமருக்கு ரசிகர்கள் மத்தியில் பெயரைப் பெற்றுத்தந்தன. பின்னர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ‘கோமாளி’, ‘சிக்ஸர்’, 'தில்லுக்கு துட்டு-2', 'எதற்கும் துணிந்தவன்', 'வந்தா ராஜாவா தான் வருவேன்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூருக்கு நடுவே உள்ள அரிட்டாபட்டியை சார்ந்தவர் ராமர். இவருக்கும் திருமணம் ஆகி கிருஷ்ணவேனி என்கிற மனைவி மற்றும் 3 குழந்தைகள் (யமுனா ஸ்ரீ, ஹரிஷ், ஐஸ்வர்யா) உள்ளனர்.  விஜய் டிவில் நடிப்பதுடன், சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக (விஏஓ) பணியாற்றியும் வருகிறார் நடிகர் ராமர்.

இந்நிலையில் நடிகர் ராமர் சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தியுள்ள  புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வில் நடிகர்கள் ரோபோ சங்கர், நாஞ்சில் விஜயன் உட்பட பல விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ராமருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ராமர் வீடு என்கிற ஒரு நிகழ்ச்சி பிரபலம். நகைச்சுவை நிகழ்ச்சியான இந்நிகழ்ச்சி நடிகர் ராமரை மையமாக வைத்து ஒளிபரப்பாவது. இந்நிலையில் உண்மையிலேயே இதுதான் ‘ராமர் வீடு’ என்று ரசிகர்கள் ராமரின் தற்போதைய புதுவீட்டை குறிப்பிட்டு வாழ்த்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Vijay TV Ramar New Housewarming விஜய் டிவி ராமர் வீடு

People looking for online information on விஜய் டிவி ராமர், KPY Ramar, Ramar Veedu, Vijay TV Ramar will find this news story useful.