www.garudabazaar.com

CHRISTMAS-ஸை வரவேற்க வெளிநாட்டில் பிரதீப் ரங்கநாதன்.. புகழ்பெற்ற இடத்திலிருந்து பகிர்ந்த செம PHOTO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

Love Today Director Pradeep Ranganathan in London Bridge

Also Read | அஜித் நடிக்கும் 'துணிவு' படத்தின் தெலுங்கு டைட்டில் இதுதான்! ரிலீஸ் எப்போ?

'கோமாளி' படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தார். 

நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்தனர்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4, 2022 ஆம் தேதி வெளியானது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் திரையரங்குகளில் வெற்றி பெற்றதை ஒட்டி நடிகர், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஒரு அறிக்கையை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியிருந்தார்.

மேலும் சென்னையில் உள்ள பிரபல கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் லவ் டுடே திரைப்படம்,  2022 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களின் வசூலில் முதல் 5 இடத்தில் நுழைந்து சாதனை படைத்துள்ளது என‌ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் தெலுங்கிலும் இந்த படம் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிலம்பரசன் ஆகியோரும் இந்த படத்தினை பாராட்டி இருந்தனர். இதனையடுத்து இந்த படம் தற்போது பிரபல நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

Love Today Director Pradeep Ranganathan in London Bridge

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். லண்டன் நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற லண்டன் பாலத்தின் அருகில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "மறக்கமுடியாத பயணம்.. மறக்க முடியாத மனிதர்கள். நிறைய நினைவுகள் #கிறிஸ்துமஸ்" என பதிவிட்டுள்ளார்.

Also Read | வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா.. ஒளிபரப்பு செய்யும் பிரபல முன்னணி TV சேனல்! முழு தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Love Today Director Pradeep Ranganathan in London Bridge

People looking for online information on Love today, Love Today Director, Pradeep Ranganathan, Pradeep Ranganathan in London Bridge will find this news story useful.