www.garudabazaar.com

தனாக்கு Love லெட்டர் கொடுத்த அசிம்.. "அதுல இப்படி ஒரு தப்பா பண்ணி வைப்பீங்க!!".. செம Fun 😅

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 70 நாட்களை கடந்த நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

Azeem as school boy love proposal to dhanalakshmi fun task

Also Read | கண்ணீர் விட்டு கதறிய மனுசன்.. கட்டியணைச்சு ஆறுதல் சொல்லும் விக்ரமன்.. bigg boss 6

இனிவரும் நாட்கள் ஒவ்வொன்றும் பிக்பாஸ் வீட்டில் தங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு மிக முக்கியமான ஒன்று என்பதால், அனைத்து போட்டியாளர்களும் தங்கள் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதே போல, ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது. பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது.

Azeem as school boy love proposal to dhanalakshmi fun task

அதே போல, சமீபத்தில் நடந்து முடிந்த ‘சொர்க்கம் – நரகம் – ஷார்ட்கட்’ டாஸ்க்கில் கூட நிறைய சண்டைகள் மற்றும் குழப்பங்கள் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் அரங்கேறி இருந்தது. இதனிடையே, பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வார எலிமினேஷனில் ஜனனியும் வெளியேறி இருந்தார். இறுதி போட்டி வரை முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜனனி பாதியில் வெளியேறி இருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டு பண்ணி இருந்தது.

இதற்கடுத்து மீதமுள்ள போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடி வருகின்றனர். மேலும், இந்த வாரம் பிக்பாஸ் வீடு பள்ளிக்கூடமாக மாறி உள்ளது. போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாக மாறி விளையாடி வருகின்றனர். தற்போது கதிரவன், மைனா நந்தினி ஆகியோர் ஆசிரியர்களாகவும், அமுதவாணன் பிரின்சிபால் ஆகவும் வருகிறார்.

Azeem as school boy love proposal to dhanalakshmi fun task

மற்ற 7 பேரும் மாணவர்களாக பிக்பாஸ் வீட்டில் வலம் வரும் சூழலில், அசிம் மற்றும் தனலட்சுமி ஆகியோர் முழுக்க முழுக்க பார்வையாளர்கள் கவனம் ஈர்த்து வருகின்றனர்.

இதற்கு காரணம், தனலட்சுமியை காதலிப்பதாக அவர் பின்னால் ஒரு ஜாலி மாணவனாக அசிம் வலம் வருவது தான். கதிரவன் ஆசிரியராக வகுப்பு எடுத்துக் கொண்டிருக்க, தனலட்சுமி, விக்ரமன், ஷிவின், ரச்சிதா, ADK, அசிம், மணிகண்டா ஆகியோர் மாணவ மாணவிகளாக வகுப்புகளை கவனித்து கொண்டிருக்கின்றனர்.

அந்த சமயத்தில், தனலட்சுமி பின்னால் இருக்கும் அசிம், வரை Sugi என அழைத்து காதல் கடிதம் ஒன்றை எழுதி தனா கையில் கொடுக்கிறார். இதனை அறிந்ததும், கோபத்தில் சார் என கத்தி கதிரவனிடம் தனலட்சுமி போட்டுக் கொடுக்க, கடிதத்தில் இருந்த வரிகளை படித்து அசிமையும் அவர் கிண்டல் செய்கிறார். "நான் உன்னை காதலிக்கிறேன்" என எழுதுவதற்கு பதிலாக, "நான் என்னை காதலிக்கிறேன்" என்றும் அசிம் எழுதி வைத்ததாக தெரிகிறது.

Azeem as school boy love proposal to dhanalakshmi fun task

இதன் பின்னர், தொடர்ந்து தனலட்சுமியிடம் தனது காதலை வெளிப்படுத்துவது போல அசிம் அவரை சுற்றி சுற்ற வந்த பிறகும் தனா கண்டு கொள்ளவே இல்லை என தெரிகிறது. இப்படி நாள் முழுக்க தனலட்சுமியை சுற்றி சுற்றி அசிம் ஸ்கோர் செய்துள்ள நிலையில், ஒரு கட்டத்திற்கு பிறகு "நீ என்னை காதலிக்கவில்லையா?" என தனலட்சுமியிடம் அசிம் கேட்க இல்லை என்றும் பதில் சொல்கிறார். இனிமேல் நாம் பிரேக் அப் செய்து கொள்ளலாம் என அசிம் கூறியதும், "நான் ஒத்துக்கவே இல்லை, அப்புறம் எப்படி பிரேக் அப் ஆகும்?" என்றும் தனலட்சுமி ஜாலியாக கேள்வி கேட்கிறார்.

இப்படி பள்ளிக்கூட டாஸ்க்கில் அசிம் மற்றும் தனலட்சுமி ஆகியோரிடையே நடந்த Performance பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

Also Read | "பொய்யா பழகுறாங்க, என் பின்னாடியும் பேசுவாங்க".. ஆனா அமுது மட்டும்.. Janany சொன்ன விஷயம்!!

தொடர்புடைய இணைப்புகள்

Azeem as school boy love proposal to dhanalakshmi fun task

People looking for online information on Azeem, Azeem as school boy, Bigg boss 6 tamil, Bigg Boss 6 Tamil School Task, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Dhanalakshmim, Vijay Television, Vijay tv will find this news story useful.