Walter ஹீரோவுக்காக நீண்ட இடைவெளிக்கு பின் பாடிய பிரபல பின்னணி பாடகர்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 10, 2019 11:17 AM
சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘வால்டர்’ திரைப்படத்தில் பிரபல பின்னணி பாடகர் மனோ பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ள பின்னணி பாடகர் மனோ, தற்போது, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பாடல்கள் தொடர்பான நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துவருகிறார்.
இந்நிலையில், சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் சிபிராஜ் நடிக்கும் ‘வால்டர்’ திரைப்படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த பாடலின் ரெக்கார்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இறுதியாக விஜய் சேதுபதி நடித்த ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அக்கம் பக்கம் பார்’ என்ற பாடலை பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதுக்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்தில் சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சிபிராஜிற்கு ஜோடியாக ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் ஹீரோயின் ஷிரின் காஞ்ச்வாலா நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் அன்பரசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வால்டர்’ திரைப்படத்தை 11:11 புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபு திலக் தயாரிக்கிறார்.
இந்த படத்தை தவிர சிபிராஜ் நடிப்பில் ‘ரங்கா’, ‘ரேஞ்சர்’, ‘வட்டம்’ உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.