'ஒரு பொண்ணுனு கூட பார்க்காம....' - வெளியேறிய காரணத்தை தடாலடியாக போட்டுடைக்கும் மதுமிதா
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 09, 2019 01:46 PM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா தன்னைத் தானே துன்புறுத்திக்கொண்டதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கான காரணம் என்னவென்பது தெளிவாக தெரியவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியும் அந்த பகுதியை ஒளிபரப்பவில்லை. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சி மீது மதுமிதா காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மதுமிதா, ''மழை வருவதற்காக நான் சொன்ன கவிதை தான் பிரச்சனைக்கு காரணம். வருண பகவானும் கர்நாடகத்தை சேர்ந்தவரும் மழைவடிவில் கூட தண்ணீரை தமிழகத்துக்கு தரவில்லை என்று சொன்னேன். அதை 8 பேர் சேர்ந்து அரசியலாக்கிவிட்டார்கள். அப்போ நான் தேவையில்லாத விஷயங்களை பேசாதீர்கள் என்றேன். அதனை வெளியிடுவதும் வெளியிடாததும் சேனல் முடிவு பண்ணட்டும். என்றேன்
ஆனால் என்னை சேரனும் கஸ்தூரி எனக்கு ஆதரவாக பேசுனாங்க. பின்னர் ஷோவில் இருந்து லெட்டர் வந்தது. அரசியல் பேசாதீர்கள். இது ஒளிபரப்பபட மாட்டாது என்று அந்த லெட்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுவரை என்னை கிண்டல் செய்துவந்த போட்டியாளர்களுக்கு அது அல்வா சாப்பிடுவது போல் ஆகிவிட்டது. கேங் ஹராஸ்மன்ட் பண்ணாங்க. எனக்கு ஆதரவாக பேசியதற்காக கஸ்தூரி மேடத்தை தகாத வார்த்தையில் பேசுனாங்க. அப்போ என்ன பன்றதுனு தெரியாம என் கைய நான் கட்பண்ணிட்டேன்.
பின்னர் நான் என்ன பேசுனேன் என்று எனக்கு நியாபகம் பேசவில்லை. என் தமிழ்நாட்டுக்காக நான் பேசுன கவிதைக்கு ஒரு பொண்ணுனு பார்க்காம எவ்ளோ அசீங்கப்படுத்துவீங்க. அந்த கவிதையில என்ன தப்பு இருக்கு. அந்த கவிதைய தப்புனு சொல்லிட்டு என் ஊருல இருக்குற எல்லோரையும் மக்களுக்கு அடையாளம் காட்டாம விடமாட்டேன் என்றார்.
கமல் சார் அத பற்றி விசாரிக்காதது பெரும் வருத்தத்தை அளித்தது. கமல் சாரிடம் நான் வைக்கும் வேண்டுகோள் என்னென்னா உங்கள் ரசிரையோ கட்சித் தொண்டனையோ உள்ளே அனுப்பி தெரிந்து கொள்ளுங்கள்'' என்றார்.