பிக்பாஸில் கோல்டன் டிக்கெட் பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது இவரா ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 21, 2019 08:37 PM
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் Ticket To Finale குறித்து பிக்பாஸ் கடந்தவாரம் அறிவித்தார். அதன்படி கடந்த வாரம் கொடுக்கப்படும் டாஸ்க்குகளில் யார் சிறந்து விளங்குகிறார்களோ அவர்கள் நேரடியாக இறுதிப்போட்டியில் கலந்து கொள்வார்கள்.

இதனால் கடந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க்குகள் கடுமையாக இருந்தது. வி ஆர் தி பாய்ஸ் என்று ஒற்றுமையாக இருந்த நண்பர்கள் குழுவில் சற்று விழத் தொடங்கியது. அதுவரை டாஸ்க்குகளில் பெரிதும் ஆர்வம் காட்டாமல் இருந்த கவின் கூட டாஸ்க்குகளில் தீவிரம் காட்டினார். அதனால் சாண்டி, ஷெரின், தர்ஷன் உள்ளிட்டோருடன் மோதிக் கொண்டார்.
இந்நிலையில் தற்போது ஒளிபரப்பான மூன்றாவது புரோமோவில் கோல்டன் டிக்கெட் பற்றி எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல் அறிவித்தார். இந்த டிக்கெட் முகேனுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது
Tags : Kavin, Losliya, Bigg Boss 3, Mugen, Kamal Haasan