''நாங்க என்னமோ உங்கள தடுத்து வச்சமாதரியும்...'' - கவினை கலாய்த்த கமல்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 21, 2019 07:16 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இறுதிச்சுற்றில் நேரடியாக கலந்துகொள்வதற்கான டிக்கெட் பற்றி அறிவித்தார். அதன் படி டாஸ்க்குகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அந்த டிக்கெட் கிடைக்கும்.

இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து நட்புக்கு உதாராணாம விளங்கியவர்கள் கவின் மற்றும் சாண்டி. ஆனால் அந்த நட்பில் கடந்த வாரம் விரிசல் ஏற்பட்டது. டாஸ்க் ஒன்றில் ஆர்வத்தில் சாண்டி லாஸ்லியாவை தடுமாறச் செய்கிறார். அதனை பார்த்த கவின் கடுமையாக சாடுகிறார்.
மனம் உடையும் சாண்டி பிக்பாஸிடம் கண்ணீர் விடுகிறார். மேலும் கவினுடன் பேச அதற்கு கவின் சமாதானப்படுத்துகிறார். இந்நிலையில் இன்று (செப்டம்பர் 21) ஒளிபரப்பான இரண்டாவது புரோமோவில் கமல் இதுபற்றி கேள்வி எழுப்புகிறார். அப்போது சாண்டி கமலிடம் கவின் திட்டுனதும் எனக்கு கஷ்டமாயிடுச்சு என்கிறார். பின்னர் பேசும் கமல், லாஸ்லியா அத பெருசா எடுத்துக்கல. கவின் தான் ரொம்ப வருத்தப்பட்டாரு.
அப்போது கவின், நான் பேசலாமா என கேட்க , அதற்கு பதிலளிக்கும் கமல், ''நாங்க என்னமோ உங்கள தடுத்து வச்சமாதரி...'' என்று நக்கலாக சொல்ல அரங்கம் சிரிப்பினால் அதிர்கிறது.
''நாங்க என்னமோ உங்கள தடுத்து வச்சமாதரியும்...'' - கவினை கலாய்த்த கமல் வீடியோ