மாஸ்டர் இயக்குநரின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம்... இந்தியில் ரிமேக்காகும் கார்த்தியின் கைதி !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற கைதி திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

karthi lokesh kanagaraj's kaithi to be remake in hindi

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் கைதி. கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியான இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மிகப்பெரிய ஹிட் அடித்தது. போதை மருந்து கும்பலை ஒரு கைதியின் துணையுடன் ஒரு போலீஸ் அதிகாரி எதிர்ப்பதை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது. ஒரே இரவில் நடக்கும் இத்திரைப்படம் பாடல்களும் கதாநாயகியும் இல்லாமல் எடுக்கப்பட்டது. நரேன், அர்ஜுன் தாஸ், ஹரீஷ் பெரேடி, ரமணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் கைதி படத்தை இந்தியில் ரீமேக் செய்யப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கைதி திரைப்படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், பாலிவுட்டை சேர்ந்த ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து இத்திரைப்படத்தை ரீமேக் செய்யவுள்ளது. படத்தில் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப குழு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

Entertainment sub editor