லாஸ்லியா, ஹர்பஜன் சிங் படத்துக்கு பிறகு இன்னொரு படம் - ஹீரோ யார் தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இலங்கை தனியார் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவரது இலங்கை தமிழ் பேச்சு, கியூட்டான நடவடிக்கைகள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Bigg Boss Losliya to act with Aari Arujuna after Harbhajan Singh Friendship

இதன் காரணமாக சமூக வலைதளங்களில் லாஸ்லியா ஆர்மி உருவானது. பின்னர் பிக்பாஸின் இறுதி நாட்களில் கவினுடனான அவரது நட்பு பெரிதும் விவாதங்களுக்கு உள்ளானது. அப்பொழுதே லாஸ்லியாவிற்கு இருந்த வரவேற்பை பார்த்த, பல பிரபலங்கள் விரைவில் தமிழ் சினிமாவின் ஹீரோயின் ஆகிவிடுவார் என்று கருத்து கூறினர்.  

பிக்பாஸ்க்கு பிறகு அவரது ஃபோட்டோஷூட் புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில் நேற்று ( பிப்ரவரி 4 ) ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் 'ஃபிரெண்ட்ஷிப்' படத்தில் அவர் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை ஜேபிஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்க, ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் வெளிவரும் முன்னரே லாஸ்லியா ஹீரோயினாக நடிக்கும் மற்றொரு படத்தின் அறிவிப்பு வெளியானது. அதில் 'நெடுஞ்சாலை' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த ஆரி அர்ஜூனா நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ஆல்பர்ட் ராஜா இயக்க, சந்திரா மீடியா விஷன் நிறுவனம் தயாரிக்கிறது. சி.சத்யா இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

Entertainment sub editor