தமிழ்ப் படத்தில் சோலோ ஹீரோவாகும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் – விவரம் உள்ளே!
முகப்பு > சினிமா செய்திகள்இந்திய கிரிக்கெட் அணியில் பிரபலமான வீரர் ஹர்பஜன் சிங். தனது விளையாட்டுத் திறமையால் இந்தியா முழுதும் ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் இவர் தமிழில் ஸ்டேட்டஸ் போட்டு வந்ததால் தமிழ் மக்களுக்கு நெருக்கமானார்.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் நடிகர் சந்தானத்தின் டிக்கிலோனா படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் தற்போது ஹர்பஜன் ஒரு தமிழ் படத்தில் சோலோ ஹீரோவாக நடிக்கிறார். சியண்டோவா ஸ்டுடியோ, சினிமா ஸ்டுடியோ நிறுவனகள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு ஃப்ரெண்ஷிப் என்று பெயர் சூட்டியுள்ளனர். ஜான் பவுல் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இந்த படத்தை இயக்குகின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
நேற்று கீச்சு,சினிமா கதாபாத்திரம்,இணைய தொடர்.இன்று #SeantoaStudio #CinemaaStudio தயாரிக்கும் #FriendShip படத்தின் நாயகன்.#தமிழ் மக்களுக்கு நன்றி.திருக்குறள் டூ திரைப்பயணம் எல்லாம் சாத்தியப்படுத்தியது என் #தலைவர் #தல #தளபதி சின்னாளப்பட்டி சரவணன்-@ImSaravanan_P அசத்துவோம் @JPRJOHN1 pic.twitter.com/Z5pePt7R72
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 2, 2020