www.garudabazaar.com

"Million நன்றிகள் சொன்னாலும் போதாது".. பிரபல இயக்குனருடன் லியோ செட்டில் லோகேஷ்.. வைரல் பதிவு!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக 'லியோ' படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்திலும் நடிகர் விஜய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Lokesh Kanagaraj thanks mysskin for his presence in leo movie

Images are subject to © copyright to their respective owners.

Also Read | நடிகை மீனா பங்குபெறும் Behindwoods-ன் Fans Meet .. எங்க? எப்போ? முழு விபரம்..!

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ படம் தயாராகி வரும் சூழலில், இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி துவங்கிய சூழலில் தற்போது காஷ்மீரில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முன்னதாக லியோ படத்தின் டைட்டில் Announcment வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்திருந்தது.

Lokesh Kanagaraj thanks mysskin for his presence in leo movie

Images are subject to © copyright to their respective owners.

லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S .லலித்குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். ராக்ஸ்டார் அனிருத், லியோ படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய,  படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

Lokesh Kanagaraj thanks mysskin for his presence in leo movie

Images are subject to © copyright to their respective owners.

லியோ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கின் கலந்து கொண்டிருந்தார். அவரது காட்சிகள் படமாக்கப்பட்ட சூழலில் அவை நிறைவு பெற்றிருந்தது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த மிஷ்கின், தயாரிப்பாளர் எஸ் லலித் குமார், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரையும் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் Leo திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்றும் மிஷ்கின்தெரிவித்திருந்தார்.

Lokesh Kanagaraj thanks mysskin for his presence in leo movie

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், மிஷ்கினுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ், லியோ படத்தில் மிஷ்கின் நடித்தது பற்றி சில உருக்கமான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான லோகேஷ் ட்வீட்டில், "மை டியர் மிஷ்கின் சார், இவ்வளவு நெருங்கிய நிலையில் உங்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இதை வெளிப்படுத்த  ஒரு மில்லியன் நன்றிகள் சொன்னாலும் போதாது. நீங்கள் செட்டில் இருந்தது ஒரு மிகுந்த ப்ளாஸ்ட் ஆக தான் எங்களுக்கு இருந்தது. நான் உங்களுக்கு ஒரு போதும் போதுமான நன்றியை சொல்லிவிட முடியாது. இருந்தாலும் ஒரு மில்லியன் நன்றிகள்" என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | புதிய படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கும் நடிகை அனுஷ்கா .. வெளியான First Look போஸ்டர்.!

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh Kanagaraj thanks mysskin for his presence in leo movie

People looking for online information on Leo, Lokesh Kanagaraj, Mysskin will find this news story useful.