www.garudabazaar.com

சன்னி லியோன் சமூக வலைத்தள பக்கம் முடக்கமா..? அவரே வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சன்னி லியோன், டிவிட்டர் பக்கத்தில் முடக்கப்பட்ட தமது சமூக வலைத்தள பக்கம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Sunny leone Tweet about her LinkedIn profile

Images are subject to © copyright to their respective owners.

Also Read | அடடே.. ரஞ்சிதமே டான்ஸ் மூலம் வைரலான பெண்ணுக்கு.. ராஷ்மிகாவின் அசத்தல் கிஃப்ட்..

பாலிவுட் திரைப்படங்களில் நடித்து இந்தியா முழுவதும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துக் கொண்டுள்ளவர் நடிகை சன்னி லியோன்.

ஹிந்தி திரைப்படங்கள் மூலம் தனது திரை பயணத்தை சன்னி லியோன் ஆரம்பித்தாலும், இன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும், சன்னி லியோன் கவனம் செலுத்தி வருகிறார். அது மட்டுமில்லாமல், சில திரைப்படங்களில், ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியும் வருகிறார்.

டேனியல் வெபர் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட சன்னி லியோன், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் நிலையில், வாடகைத் தாய் மூலம்,  இரட்டைக் குழந்தைகளையும் பெற்று வளர்த்து வருகிறார்.

Sunny leone Tweet about her LinkedIn profile

தனக்கு கிடைத்த புகழ் காரணமாக, எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கு, இந்தியாவின் எந்த மாநிலத்தில் சன்னி லியோன் சென்றாலும், அவரைக் காண ரசிகர்கள் கூட்டம் அலை மோதும்.

சமீபத்தில் சன்னி லியோன் நடிப்பில் தமிழில் கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் ஓ மை கோஸ்ட் திரைப்படம் வெளியானது.

இந்நிலையில் சன்னி லியோன், தமது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், "அனைவருக்கும் வணக்கம், LinkedIn தளத்தில் இணைந்து ஒரு மாதம் கழித்து "அந்த கணக்கு என்னுடையது இல்லை" என்று கூறி எனது கணக்கை முடக்கி உள்ளனர்" என சன்னி லியோன் ட்வீட் செய்திருந்தார்.

Sunny leone Tweet about her LinkedIn profile

மேலும் “நான் புதிதாக துவங்கிய LinkedIn பக்கத்தை நிறைய ரசிகர்கள் பின்தொடர்ந்ததை நான் அறிவேன். ஆனால் இது எனது பக்கம் முடக்கப்பட்டது. இது மிகவும் மோசமான அனுபவம். இது தொடர்பாக எனக்கு ஒரு  மின்னஞ்சல் கூட அவர்கள் அனுப்பவில்லை. அவர்கள் தங்களது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்" என கூறியிருந்தார். தற்போது சன்னி லியோனின் LinkedIn பக்கம் மீண்டும் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | மங்காத்தா பட அஜித் INTRO குறித்த சந்தோஷ் நாராயணனின் ட்வீட்.. செம்ம REPLY செய்த யுவன்! வைரல்

தொடர்புடைய இணைப்புகள்

Sunny leone Tweet about her LinkedIn profile

People looking for online information on Sunny Leone, Sunny Leone Tweet will find this news story useful.