www.garudabazaar.com

நடிகை மீனா பங்குபெறும் Behindwoods-ன் Fans Meet .. எங்க? எப்போ? முழு விபரம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Behindwoods சேனல் தொடர்ந்து பல்வேறு சிறந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருவது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Actress Meena Fans Festival Behindwoods date and other details

அந்த வகையில் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சியாக "Fans Festival" இருந்து வருகிறது. திரை உலகிலும், சின்னத் திரையிலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பலரும் இந்த Fans Festival நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களின் ரசிகர்களுடன் கலந்துரையாடவும் செய்வார்கள்.

முன்னதாக, நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அதே போல, பிக் பாஸ் ஆறாவது சீசனில் இருந்த போட்டியாளர்கள் கூட பங்கேற்று ரசிகர்களுடன் உரையாடவும் செய்திருந்தனர்.

Actress Meena Fans Festival Behindwoods date and other details

அந்த வகையில், பிரபல நடிகை மீனா Behindwoods நடத்தும் Fans Festival நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். சென்னை ஓஎம்ஆரில் வைத்து இந்த நிகழ்ச்சி மார்ச் 4 ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. ரசிகர்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் என்ற சூழலில், இது கலந்து கொள்வதற்கான விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு நடிகை மீனாவின் கணவர் உடல்நல குறைவால் உயிரிழந்த சூழலில் இதன் காரணமாக அதிகம் துவண்டு போயிருந்தார் மீனா. தொடர்ந்து மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டு வரும் மீனா, சகஜமாகவும் இருந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Actress Meena Fans Festival Behindwoods date and other details

People looking for online information on Fans Festival Behindwoods, Fans meet, Meena, Meena Fans Festival will find this news story useful.