www.garudabazaar.com

மோகன் லால் நடிக்கும் 'மலைக்கோட்டை வாலிபன்'.. அசத்தலான லுக்கில் வெளிவந்த முதல் லுக் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும்  புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Lijo Jose Pellissery Malaikottai Vaaliban starring Mohanlal.

மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா இளம் இயக்குனர்களில் முக்கியமானவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.

இவர் இயக்கத்தில் முன்பு வெளியான ஆமென், அங்கமாலி டைரிஸ், இ.ம.யூ, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட படங்கள் உலக அளவில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக ஜல்லிக்கட்டு திரைப்படம் இந்தியா சார்பில் 93ஆவது ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது.

லிஜோ ஜோஸ் தற்போது தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் மம்முட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் என புதிய படத்தை இயக்கி முடித்துள்ளார்.

நாகை மாவட்டம் வேளாங்கன்னியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.

இதற்கு பிறகு லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி தனது அடுத்த படத்தை மோகன்லால் நடிப்பில் இயக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது.  அந்த அறிவிப்பில், "எனது அடுத்த படம், இந்திய சினிமாவின் மிகவும் அற்புதமான மற்றும் அபார திறமையுள்ள இயக்குனர்களில் ஒருவரான லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியுடன் இருக்கும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தை ஜான் அண்ட் மேரி கிரியேட்டிவ், மேக்ஸ் லேப்ஸ் மற்றும் செஞ்சுரி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் ”என்று  மோகன்லால் அறிவித்தார்.

இந்த படத்திற்கு "மலைக்கோட்டை வாலிபன்" என தமிழில் பெயரிடப்பட்டுள்ளது.  ஏற்கனவே மம்மூட்டி நடிப்பில் உருவாகி உள்ள நண்பகல் நேரத்து மயக்கம் படத்திற்கும் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி தமிழ் தலைப்பு வைத்தது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Mohanlal

தொடர்புடைய இணைப்புகள்

Lijo Jose Pellissery Malaikottai Vaaliban starring Mohanlal.

People looking for online information on Mohanlal will find this news story useful.