www.garudabazaar.com

Bigg Boss Malayalam : "லைவை நிறுத்துங்க!".. போட்டியாளர்களின் மோசமான நடத்தை.. கொந்தளித்த மோகன்லால்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகெங்கும் ஒளிபரப்பாகும் பெருவணிக மற்றும் பிரம்மாண்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சி பிக்பாஸ். 

Bigg Boss Malayalam host Mohanlal stopped the show midway

100+ நாட்களில் போட்டியாளர்கள் தங்கள் மனவலிமை மற்றும் உடல்வலிமை கொண்டு இந்த போட்டியில் எவ்வாறு தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, பார்வையாளர்களின் உதவியுடன் வெற்றியாளரை அறிவிக்கும் இந்த நிகழ்ச்சி இந்தியில் 15 சீசன்களாக வெற்றிகரமாக கடந்துள்ளது.

மேலும் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னக மொழிகளிலும் இந்நிகழ்ச்சி களைகட்டி வருகிறது. தமிழை பொருத்தவரை, அண்மையில் முடிந்த தமிழ் பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சியில் அசீம் டைட்டில் வென்றார்.  அந்த வரிசையில் மலையாளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன், கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தொடங்கி பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்நிலையில், எடுத்த எடுப்பிலேயே பல பஞ்சாயத்துகள் உருவாகியுள்ளன.  ஆம், இந்த வாரம்  ஈஸ்டர் வாழ்த்துக்களோடு நிகழ்ச்சியை தொடங்கிய மோகன்லால்,  இந்நிகழ்ச்சிக்காக, ராஜஸ்தானில் இருந்து, பல மணிநேரம் ட்ராவல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே அகில் மாறார் எனும் போட்டியாளர், தன் சக போட்டியாளர்களான ஏஞ்சலினா மற்றும் சாகர் உள்ளிட்டோரை கெட்ட வார்த்தையில் பேசியதாக தெரியவந்ததை அடுத்து, இதுகுறித்து மோகன்லால் அவர்களிடம் அகில் மாறாரை மன்னிப்பு கேட்க சொல்ல, அவரோ மோகன் லால் கூறியபடி மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆனால் பின்னர் கையில் இருந்த கேப்டன் பேண்ட்டை கழட்டி சாகரிடம் கொடுக்க சொல்லி மோகன்லால் சொன்னபோது, அகில் தன்  கையில் இருந்த அந்த பேண்டை கழட்டி, சாகரின் கையில் கொடுக்காமல் தூக்கி வீசிவிட்டார்.

அவ்வளவுதான், மோகன்லால் கண் முன்னே அகில் செய்த இந்த மோசமான செயலால் மோகன் லால் கடுப்பாகிவிட்டார். போட்டியாளர்களுக்காக பல மைல் தூரம் கடந்து வந்தும் தன்னை அவமரியாதை செய்வது போல் அகில் நடந்து கொண்டதாக கூறிய மோகன்லால் லைவ்வை நிறுத்த சொன்னதுடன், நிகழ்ச்சியை விட்டு வெளியேற தயாராகிவிட்டார்.

பின்னர் அவரை அங்கிருந்த பிக்பாஸ் குழுவினர் சமாதானம் செய்ததுடன, இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபட கூடாது என அகிலை பிக்பாஸ் கண்டித்ததாகவும் தெரிகிறது. அதன்பிறகு நிகழ்ச்சியை மீண்டும் மோகன் லால் தொடர்ந்தார். மலையாள பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Malayalam host Mohanlal stopped the show midway

People looking for online information on Bigg Boss 5, Bigg Boss 6, Bigg Boss Malayalam, Bigg boss mohanlal will find this news story useful.